கடைசியில் உலக அழகி ஐஸ்வர்யா ராயையும் அலற வைத்து விட்டது கொரோனா நோய்த்தொற்று: இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அவரது மகன் அபிசேக் பச்சன், அவரது மனைவி ஜஸ்வர்யா ராய், அவரது மகள் உள்ளிட்ட அனைவருக்கும் கோவிட் 19 நோய்த்தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது, இதில் ஜெயாபச்சன் மட்டுமே தப்பி இருக்கிறார்,மும்பையின் தனியார் மருத்துவமனையில் அமிதாப் குடும்பமே தஞ்சமடைந்துள்ளது, இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை தொலைபேசி வாயிலாக அழைத்து தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் விசாரித்திருக்கிறார், நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் பச்சன் குடும்பம் மொத்தமும் கொரோனாவை கடந்து வர வேணடும் என்று வேண்டியுள்ளார், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமிதாப் பச்சனின் குடும்பம் மொத்தமும் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ளார், இவர்களுக்காக மட்டுமல்ல: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 8 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்
ஐஸ்வர்யாராயை அலற வைத்த கோவிட் 19