200 தொகுதிகளில் திமுக போட்டி கற்பனை

சட்டமன்ற தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவாதங்கள் தேவையற்றவை உள்நோக்கம் கொண்டவை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களை தேவையற்றவை என்றும் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவை பொழுது போக்காக மட்டும் பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


கூட்டணிக்கட்சிகளின் தொகுதி உடன்பாடு என்பது பல கட்டங்களாக நடத்தப்படுவது என்றும் இதனை அவசரப்பட்டு ஆளுங்கட்சி யின் நலனைஅடிப்படையாக   திமுகவை மட்டுமே குறி வைத்து ஒரு சில பத்திரிகைகள் எழுதி வருவதாகவும் தொலைக்காட்சி கள்ள விவாதம் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்  இதன் மூலம் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பையும்  ஏற்படுத்தி விட முடியாது என்று கூறியுள்ளார்.