பாப்புலர் பிரண்ட்டுக்கு எதிரான கட்டுக்கதைகள்

உபி யில் பெண்களுக்கு எதிராக தொடரும் குற்ற செயல்களை கண்டித்து ,பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சென்னை மண்டல தலைவர் டாக்டர் ஆபிருதீன் பேசுகையில்: உ.பி ஹாத்ரஸ் மாவட்டத்தில் சாதி வெறியர்களால் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இக்கொடூர செயலை பாப்புலர் ப்ரண்ட்டும் வன்மையாக கண்டித்தது . பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட  குற்றவாளிகளை தண்டிக்காமல் அவர்களை காப்பாற்றும் நோக்கில் யோகி அரசும் உ.பி காவல்துறையும் செயல்பட்டு வருகின்றனர்


பாதிக்கப்பட்டவரின்குடும்பத்தை சந்திக்க சென்ற 4 நபர்களை வழிமறித்து கைதுசெய்த உபி அரசு  ஒரு பரபரப்பான செய்தியை உருவாக்கிது.  ஏனெனில் கைதுசெய்யப்பட்ட நால்வரில் இருவர் பாப்புலர் பிரண்ட்டின் சகோதர அமைப்பான கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற மாணவர் அமைப்பின் தலைவர்கள் .மற்றொருவர் சித்தீக் காப்பன். என்ற கேரள மாநிலத்தின் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர். சட்டத்திற்கு புறம்பாக அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை  பத்திரிகை யாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இதே போல டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று பாப்புலர் பிரண்ட் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக நாங்கள் சட்டப்படியான நடவடிக்கைகளில் இறங்கியபோது பாப்புலர் பிரண்ட் மீதான குற்றச்சாட்டுக்களை நீருபிக்க முடியவில்லை கைது செய்யப்பட்டவர்கள் சிலமணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட னர்.இதன் மூலம் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு எதிரான  பாஜகவின்கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அவர்  கூறினார்


இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், பொதுமக்கள்உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு உபி பாஜக  அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.