வெங்காயம் இல்லாத சாம்பார் ருசிக்காது என்பார்கள். இனி வெங்காயத்தின் விலையை கேட்டால் சாம்பார் பிரியர்கள் ஒடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை கிலோ 40 ரூபாய்க்கு விற்ற சாம்பார் வெங்காயத்தின் விலை இப்போது கிலோ 80 ரூபாய்க்கு எகிறி விட்டதால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது
நாட்டில் செயல்படும் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.உ.பியிலும் டெல்லியிலும் தான் போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன அதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் போலிகள் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது இருப்பினும் அவற்றின் பயிற்சி மையங்களின் நிழல் கூடப்படாமல் மாணவர்களைபாதுகாப்பது உயர்கல்வித்துறை யின் கடமையாகும்.
உலகம் முழுவதும் 3.5 கோடி பேர் கோவிட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் நோய்த்தொற்று காரணமாக அடுத்த ஆண்டில் 15 கோடி பேர் வறுமையின் பிடியில் தள்ளப்படுவார்கள் என்று உலக அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. வரும் 28ம்தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வு குறித்து www.tnea online.org என்ற இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மொத்தம் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1லட்சத்து 63ஆயிரத்து 154 மாணவர் சேர்க்கை யிடங்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க 1லட்சத்து 12ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் தகுதியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது
உ.பியில் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் இளம் பெண் குறித்து அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ரஞ்சித் சிறிவத்சவா தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதைதொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் முன்பு வரும் 26ம்தேதி ஆஜராக வேண்டும் என்று ரஞ்ஜித்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது
நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாகி வருகிறது . தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்கு வளம் சேர்க்கும் குடிநீர் தேவைக்கும் பயிர்களையும் உயிர்களையும் காக்கும் வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியிலோ நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எது எப்படியோவானம் பொழிய வேண்டும் பூமி விளைய வேண்டும்
மாநகரத்தின் பரபரப்பு விஐபி சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் இன்று கேக் வெட்டி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்