நிவர் புயலுக்கு நிவாரணமாக ரூபாய் 3,758 கோடி வழங்க வேண்டும் என சென்னை வந்துள்ள மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது
நிவர் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நேற்று மாலை சென்னை வந்தது இந்த குழு இன்று முதல் நாளை வரை சென்னை திருவள்ளூர் கடலூர் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆய்வு நடத்துகிறது .
இந்த நிலையில் நிவர் புயல் மழை சேதம் தொடர்பாக 3 ஆயிரத்து 758 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய குழுவிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக தற்காலிக நிவாரணமாக 650 கோடியும் உடனடி சீரமைப்பிற்காக ரூ.3,108 கோடியும் ஒட்டுமொத்தமாக, 3758 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.இத்தகவலை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்