31ம்தேதி முதல் ரஜினி ஆட்டம் ஆரம்பம்

இன்று டுவிட்டர் மூலம் அரசியல் கட்சி அறிவிப்பை வழங்கியுள்ளார், ரஜினிகாந்த்,  தமிழருவி மணியனிடம் நேற்று உடல் நலன் பற்றி விரிவாக இன்று கட்சி அறிவிப்பை டுவிட்டர் மூலம் வெளியிட்டது பெரும் வியப்பை தந்திருக்கிறது, மேலும் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன்மூர்த்தியை நியமித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது அவர் இதுவரை பாஜகவின் அறிவுச்சார் அணியின் பொறுப்பில் இருந்தவராம்,


ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவாரா இல்லையா என்பது அவருக்கு தான் தெரியும் எனக்கு தெரியாது என்று சொன்ன தமிழருவி மணியன், இன்று ரஜினிகாந்த் கட்சியின் மேற்பார்வையாளர் . ஆக திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கான அனைத்து காரியங்களையும்  தமிழருவி மணியனை கருவியாக வைத்து கொண்டு பாஜக  செய்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள், 


இதற்கிடையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ரஜினியின் புதிய கட்சிக்கு வாழ்த்து கூறியுள்ளார், அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்  என் இனிய நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,  நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள், உங்கள் உடல் நலன் முக்கியம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்,