ரஜினிக்கு உரிமையில்லை. ஜெயகுமார் திட்டவட்டம்

 


எம்ஜிஆரை கொண்டாடும் உரிமை   ரஜினிக்கும் பாஜகவுக்கும் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார், 
 எம்ஜிஆர் ஆட்சியை அமைக்க போவதாக ரஜினிகாந்த்தும்  பாஜகவும் கூறி வருவது பற்றி சென்னையில் மீன்வளத்துறை அமைச்சரும்  அதிமுக அமைப்பு செயலாளருமான ஜெயகுமாரிடம்  செய்தியாளர்கள்  வினா எழுப்பினர் அப்போது அவர் கூறுகையில்  திமுகவை எதிர்த்தும் அக்கட்சி எந்த நிலையிலும் தலை தூக்க்ககூடாது என்ற காரணத்திற்காக  அதிமுகவை தொடங்கி அதில் முழு வெற்றி கண்டவர் எம்ஜிஆர்,  அவரது பெயரை சொல்லி அவரது கொள்கை லட்சியம்  போன்றவற்றை கடைபிடித்து வரும் கட்சி அதிமுக. எங்களுக்கு தான் அதற்கு முழு உரிமை உண்டு. மற்றவர்களுக்கு இல்லை 
எம்ஜிஆர் பெயரை இரவல் வாங்கினால் அந்த கட்சியில் தலைவர்களே இல்லை என்று தான் அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்,  எம்ஜிஆரின் கொள்கை, லட்சியம் போன்றவற்றை கடைபிடிக்காமல் அவரது பெயரில் கடந்த காலத்தில் கட்சி நடத்தியவர்கள் என்னவானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்,  என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார், எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடும் உரிமை   ரஜினிக்கும் பாஜகவுக்கும் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்்