வாழ்த்துப்பா பாடிய மாணவியருக்கு எம்பி பாராட்டு

 உணர்ச்சி பொங்க தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய  அரசு பள்ளி மாணவியருக்கு திமுக எம்பி    கலாநிதி வீராசாமி   பாராட்டு தெரிவித்தார், 


திருவொற்றியூர்  சாத்துமா நகரில் உள்ள  கன்னியாகுருகுலம்  அரசினர் உயர்நிலைப்பள்ளியில்  முன்னாள் அமைச்சர் கே.பி.பி..சாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் வழங்கப்பட்ட  ரூ 75 லட்சத்தில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகளின் தொடக்க விழா  இன்று நடைபெற்றது, இந்த விழாவில்  வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி புதிய வகுப்பறைகளை  திறந்து வைத்து பேசுகையில் ,  பொதுவாக பள்ளிகளில்  டேப் செய்து  தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை தான் நான் இதுவரை  பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த பள்ளியில்  தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை  தாங்களாகவே இசையே தேவையில்லாத வகையில்  இனிமையான  குரல் வளத்தில்   உணர்ச்சி பொங்க  பாடி மாணவிகள் சாதனை படைத்திருக்கிறார்கள், அதற்காக  இந்த பள்ளி மாணவியரை பாராட்டுகிறேன், அவர்களை தமிழ்த்தாய் வாழ்த்து பாட துாண்டிய ஆசிரியர்களை  வாழ்த்துகிறேன், என்றார், மேலும் அவர் பேசுகையில்  சென்ற 2016 ஆம் ஆண்டில்  கே.பி.பி.சாமி திருவொற்றியூர் சட்டமன்றத்தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றார், அதே போன்ற வெற்றியை வரும் சட்டமன்றத்தேர்தலில் பெற்று தர நீங்களெல்லாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், அரசு விழாவில்  திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று  தனது கட்சிக்காக  தேர்தல் பிரசாரம் செய்ததால் அக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது,  முன்னதாக மாதவரம் தொகுதி திமுக எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான சுதர்சனம் குத்துவிளக்கேற்றினார், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் திமுக கவுன்சிலர்கள்  தனியரசு  , கே.பி.சங்கர் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்துமதி ஆகியோர் கலந்துகொண்டனர்,