வடசென்னையில் கோவிட் 19 ஹீரோக்கள் 9
💜ராயபுரம் ரவுண்டப் இது ஒரு வாட்ஸ் அப் குழு , கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த குழுவில் 160 பேர் உறுப்பினர்களாக உள்ளனர், இதன் அட்மின்களாக துரை.ரமேஷ் ,வழக்கறிஞர் எல்.முருகவேலு எழுத்தாளர்கள் 😆எஸ்.எஸ்.ஜெயமோகன், சிவசுப்ரமணியன், சமூக ஆர்வலர் செ.யூஜின் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர் . அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், தகவல் தொழில்நுட்பவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் அடங்கிய இந்த வாட்ஸ் அப் குழு, வெறும் செய்திகளை பதிவிடுவதோடு நில்லாமல், பல்வேறு சமூகப்பணிகளையும் ஒருங்கிணைந்து செய்து வருகிறது, இதன் மூன்றாம் ஆண்டு, விழா , கடந்த ஆண்டு ராயபுரம் சிங்காரவேலர் மணி மண்டப நுாலகத்தில் நடைபெற்றது . வாட்ஸ் அப் குழு ஆண்டு விழா நடத்தியது இதுவே முதல் முறை.
இந்த ஆண்டு, கொரோனா நோய் பரவல் காரணமாக பல்வேறு பணிகளை ஆற்றியவர்களுக்கு ராயபுரம் ரவுண்டப் குழு விருதுகளை வழங்கி சிறப்பித்தது, வடசென்னையில் கொரோனா முடக்கத்தின்போது , ஏழை எளிய மக்களை தேடி பிடித்து , முகக்கவசங்கள், கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, 90 நாட்களும் சேவையாற்றிய வடசென்னை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ராபர்ட், தனது சிறு மருத்துவ கிளினிக் மூலம் இலவச மருத்துவ பணி ஆற்றிய டாக்டர் ஏ.ரவிசங்கர், திருவொற்றியூரில் தினமும் எளியவர்களுக்கு உணவளித்து உதவிக்கரம் நீட்டிய ஆயுர்வேத டாக்டர் ஜி.ராஜகுமார், முன்களப்பணியாளர்களுக்கு ரோல் மாடலாக விளங்கிய கல்லுாரி மாணவி ரோலி மார்ட்டின், சுகாதார பணியாளராக விழிப்புணர்வு ஊட்டிய கஸ்துாரி, போலீசாருடன் சேர்ந்து போக்குவரத்து முடக்கத்தின் போது பணியாற்றிய சிவசுப்ரமணியம் ஆகியோர் ராயபுரம் ரவுண்டப் - பென்னி பிஸ்கட் நிறுவனம் இணைந்து கோவிட் 19 ஹீரோ விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் குறித்து ஆய்வு நுால்கள், அவர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய 15 புத்தகங்கள், பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறன், திருக்குறள் பகவத் கீதை குறித்தும் புதிய பார்வையில் சிந்தனை சிதறல்களை வெளியிட்ட ராயபுரத்தை சேர்ந்த தமிழறிஞர் பா,வீரமணி, ஆனந்த பவனம் மற்றும் வாக்காள பெருமக்களே ஆகிய நுால்களை வெளியிட்ட சிங்கப்பூர், இலங்கை தைவான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தமிழ்ப்பணியாற்றிய கவிஞர் க.ராமலிங்கஜோதி ஆகியோருக்கு தமிழ்ப்பேரொளி விருதுகள் வழங்கப்பட்டன இவ்விருதுகளை ராயபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சருமான டி.ஜெயகுமார் வழங்கினார்,
இந்த நிகழ்ச்சிக்கு பென்னி பிஸ்கட்அதிபர் எம்.காமராஜ், தலைமை தாங்கினார், விழாவில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பாெது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு , கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் மு.சம்பத், தொழில் அதிபர் தங்கக்கிளி தங்கப்பெருமாள்,செ.யூஜின், அன்பு நித்யா, மு.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்,
வடசென்னை கோவிட் 19 ஹீரோக்கள்