சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள அம்பிகா எம்பயர் ஓட்டல் அருகில் பேருந்துக்காக காத்திருந்தார் ஒரு பெண். தனியார் மருத்துவ ஊழியரான அவரை பின் தொடர்ந்த காவலர் ஒருவர் இந்த பக்கம் ஏம்மா வந்தே இது ஆபத்தான பகுதியாச்சே என்று மெல்ல பேச்சு கொடுத்தார்..நான் வேணும்னா உன்னை கூப்பிட்டு போய் விட்டுடறேன் என்று அன்பும் பரிவும் சேர் அழைத்தார்.அந்த அன்பபோடும் பரிவோடும் சேர்த்து குப்பென அடித்த நாற்றம் கண்டு அந்த இளம் பெண்ணை உஷாரானார்.ஏனெனில் காவல்துறையின் உடையிலேயே இருந்த காவலர் எங்கேயோ ஒசி குடி குடித்து வந்தவர் இளம் பெண்ணை ஆசை வார்த்தை காட்டியபடி நெருக்கினார். அவர் கண்ணமைக்கும் நேரத்தில் அத்து மீறலை தொடங்கினார்.இளம் பெண் கூச்சலிடவே சற்று நேரத்தில் கூட்டம் கூடியது. ஆண்கள் பெண்கள் என்று திரண்டு பின்னியெடுத்தனர்.பலர் காலில் கிடந்த செருப்பை எடுத்து பிய்யும்படி அடித்தனர். மிதி மிதி என்று துவம்சம் செய்தனர்.காமவெறியோடு காவலர் பொதுமக்களிடம் கைமா ஆனார்காவலர் என்ற போர்வையில் பட்டபகலில் காம மிருகம் வேட்டையை தொடங்கிய கதை காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு பறந்தது .கிளைமாக்ஸ் போலீஸ் கிளம்பி வந்தது. காவலரை அள்ளி கொண்டு சென்றது.இப்போது அந்த காம காவலர் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார் அவர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தின்தலைமை காவலர் ராஜியாம் தலைமை காவலரே இப்படியிருந்தால் தமிழகத்தின் நிலைமை என்னவாகும் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் வீடியோவாக தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது காமக்காவலர் தற்போது கைது செய்யப்பட்டதோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சின்னஞ்சிறுமியை சமூக விரோத கும்பலோடு பாலியல் வேட்டையாடிய எண்ணூர் இன்ஸ்பெகடர் புகழேந்தி காவல்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்திய கதை உலகறியும்.காவல்துறைக்கு ஆளெடுக்கிறார்களோ என்னவோ களையெடுப்பில் ஈடுபடுவது அவசியம்.இல்லையேல் வேலிகளே பயிர்களை மேய்வது தொடர்கதையாகும். ஓட்டு மொத்த காவல்துறைக்கும் களங்கமாகும்
அத்துமீறிய காவலரை அடித்து நொறுக்கிய பெண்கள்