தமிழகத்தில் ஆளுநருக்கும் ஆட்சியாளர் இழுக்கும் இடையேயான மோதல் மேலும் மூர்க்கமாகியிருக்கிறது. ஏற்கனவே 7.5 இட ஒதுக்கீட்டில் ஆளுநர் தொடர்ந்து தாமதித்ததால் தமிழக அரசே ஆணை பிறப்பித்தது.இதைத்தொடர்ந்து வேறு வழில்லாமல் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நிலையில் ஏழு பேர் விடுதலையிலும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மூக்கை நீட்டியிருக்கிறார்.
துணைவேந்தர் சூரப்பா மீது ரூ 200 கோடி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது தொடர்பாக தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர் சூரப்பா மீது சுமத்தப்பட்ட புகார் விசாரணை குழு அமைக்கப்பட்டது குறித்து ஆளுநர் அதிருப்தி அடைந்துள்ளார்.அவர் தன்னுடைய எதிர்ப்பை கடிதமாக எழுதி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் சூரப்பா மீது விசாரணை கமிஷன் அமைத்திருப்பது ஆளுநரை அப்செட்டாக்கி இருக்கிறதுஇதன்ன் மூலம் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் மேலும் முற்று பெறலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். மொட்டை பெட்டிசனுக்காக நேர்மையான துணைவேந்தரை வேட்டையாடினால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று எச்சரித்துள்ளார் சூரப்பா மீதான கமல்ஹாசனின் திடீர் காதலுக்கு காரணம் கவர்னரா மத்தியில் உள்ள அரசா என்று அரசியல் கட்சிகள் இடையே அர்த்தமுள்ள கேள்விகள் எழுந்துள்ளன